இந்தியாவில் 13% பள்ளி குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிப்பு

புதுடெல்லி:

இந்தியாவில் 13% பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் உணர்வை பள்ளிகளோ அல்லது பெற்றோரோ பகிர்ந்துகொள்ள தயாராக இல்லை.

பெற்றோர் வேலைக்கு செல்லும் நிலையில், தங்களை அனாதைகளாக சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் நினைக்கின்றனர்.

இந்தியாவில் இது போன்ற மன அழுத்தத்தால் ஏற்படும் மன அழுத்தத்துக்கு 13% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அபாயத்தை உணர்ந்த சிபிஎஸ்இ வாரியம், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உணர்வை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டது.

ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பள்ளிகள் கவுன்சிலிங் நடத்தினர்.
கவுன்சலிங் கொடுப்பவர்கள் குழந்தைகளின் உணர்வை புரிந்து கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது.

உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜன்னலாக கவுன்சிலிங் கொடுப்பவர்கள் இருக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: mental health interventions, மன அழுத்தம்
-=-