மும்பை: இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று வெளியேறுவதில் ஆர்வம் காட்டியதால், ரூ.3.25 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மனநிலையை ஒட்டி, இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் எண்ணியதால், இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பை பங்­குச் சந்­தை­யின் சென்­செக்ஸ் 1,066.33 புள்­ளி­கள் சரிந்து, 39728.41 புள்ளிகளில் நிலை­பெற்­றது. இதே­போல் தேசிய பங்­குச் சந்­தை­யின் நிப்­டி­யும், 290.70 புள்­ளி­கள் சரிந்து 11680.35 புள்­ளி­களில் நிலை­ப்பெற்­றது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் கொரோனா காரணமாக ஏற்பட்ட தாக்­கம், இந்­திய சந்­தை­க­ளி­லும் பிர­தி­ப­லித்­தன.
மும்பை சந்­தை­யின் சென்­செக்ஸ் பிரி­வில், ஏஷி­யன் பெயின்ட்ஸ் பங்­கு­கள் மட்­டும் 0.32% என்ற மிகச்சிறிய அள­வில் விலை அதி­க­ரித்­தன. மற்ற நிறு­வன பங்­கு­கள் அனைத்­தும் சரி­வையே கண்­டன.