மும்பை

தொடர்ந்து கடும் பாதிப்பை அடைந்து வரும் இந்தியப் பங்குச் சந்தை இன்றும் கடும் சரிவுடன் தொடங்கி உள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பங்குச் சந்தை கடும் பாதிப்பை அடைந்துள்ளது..  அந்த பாதிப்பு இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்ததால் பங்குச் சந்தை கடுமையாகச் சரிந்தது.  சென்ற வாரம் ஒரே நாளில் இந்தியப் பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் ரூ.11 லட்சம் கோடி இழப்பை சந்தித்தனர்.

இன்று அமெரிக்க ,பெடரல் ரிசர்வ் தனது வட்டியைப் பெருமளவில் குறைத்துள்ளதால் அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்வில் இருந்து மீளூம் என எதிர்பார்ப்பு இருந்தது.   அத்துடன் இந்தியப் பங்குச் சந்தையும் முன்னேற்றம் காணும் என எதிர்பார்ப்பு இருந்தது.

இன்று தொடக்கத்தில் இருந்தே இந்தியப் பங்குச் சந்தை  கடும் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் எண் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.  நிஃப்ட்ய் யிலும் 500 புள்ளிகள் சரிவு உண்டாகி இருக்கிறது