பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்..?

டில்லி:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து பயங்கரவாதிகளின் தளங்களைத் தாக்கிய இந்திய படையினரில் ஒரு வீரர் அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

download-1

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷமீரிருக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் தளங்களை இந்திய ராணவம் தாக்கியது. இந்தத்  தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொன்றுவிட்டு, எவ்வித ஆபத்தும் இன்றி இந்திய படையினர் திரும்பியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 8 பேரை சுட்டு வீழ்த்தியதாகவும், மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயதாகும், சந்து பாபுலால் சவுகான் என்ற ராணுவ வீரரை பிடித்து வைத்துள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அதேநேரம், சந்து பாபுலால் தவறுதலாக எல்லையை தாண்டியதாகவும் அப்போது பாகிஸ்தான் ராணவத்திடம் பிடிபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி