பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் 3 இந்திய வீரர்கள் பலி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

இந்திய ராணுவ நிலைகள், கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியுள்ளது. இதேபோல் இன்று காலை பூஞ்ச் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு சிறுமியும், ஒரு இந்திய ராணுவ வீரரும் காயமடைந்தனர் என்பது குறிப்பிட்டதக்கது.

இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.