கட்டாக்: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளவரும், ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவருமான 23 வயது பெண் டுட்டீ சந்த், தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒடிசாவிலுள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தின் சாக்கா கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.

அவர் கூறியுள்ளதாவது, “ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் வாழ்க்கையை வாழும் உரிமைப் பெற்றவர்கள். என் ஆன்மாவிற்கு மிகவும் நெருக்கமாக நான் ஒருவரை கண்டறிந்துள்ளேன்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை நான் எப்போதுமே ஆதரித்து வந்துள்ளேன். இது தனிப்பட்ட ஒரு மனிதரின் விருப்பம். உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கை தொடர்பாக வழங்கிய தீர்ப்பை அடுத்தே, எனது ஒரு பாலின உறவு குறித்து வெளியில் சொல்லக்கூடிய நம்பிக்கையைப் பெற்றேன்.

எனது அடுத்த இலக்கு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள்தான். அனைத்தையும் சாதித்துவிட்டு, எதிர்காலத்தில் என் பிரியமானவளுடன் சேர்ந்து வாழ்வதே என் விருப்பம்” என்றார்.