நியூசிலாந்து டி-20 தொடர் – இந்திய அணியில் யார் உள்ளே? யார் வெளியே?

மும்பை: நியூசிலாந்திற்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் ஷர்மா மற்றும் முகமது ஷமிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மொத்தம் 5 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டி ஜனவரி 24ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

இந்திய டி-20 அணியில் சில வீரர்களுக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ரோகித் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கேரளாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும், ஹர்திக் பாண்ட்யாவும் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணி விபரம்:

விராத் கோலி(கேப்டன்)
ரோகித் ஷர்மா(துணைக் கேப்டன்)
லோகேஷ் ராகுல்
ஷிகர் தவான்
ஸ்ரேயாஷ்
ரிஷப் பன்ட்(விக்கெட் கீப்பர்)
குல்தீப் யாதவ்
யுவேந்திர சாஹல்
மணிஷ் பாண்டே
ஷிவம் துபே
ஜஸ்ப்ரிட் பும்ரா
ஷர்துல் தாகுர்
நவ்தீப் சைனி
வாஷிங்டன் சுந்தர்
ரவீந்திர ஜடேஜா
முகமது ஷமி