Random image

இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு….ரூ.2.72 லட்சம் கோடி இழப்பு

மும்பை:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின் சற்று தேக்க நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 2 நாட்களாக மீண்டும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 295 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 37,290 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 98.85 புள்ளிகள் சரிந்து 11,278 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.

டாலர் மதிப்பு உயர்வால் முதலீட்டு நிறுவனங்கள் பல லாபத்தைப் பதிவு செய்யும் வகையில் தங்கள் பங்குகளை விற்பனை செய்தது,
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களில் ரூ.2.72 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.

You may have missed