கல்விக்காக ஆஸ்திரேலியா சென்ற இந்திய மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரிப்பு

ஸ்திரேலியாவில் மேற்படிப்பு படிக்க செல்லும் இந்திய மாணவகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 25 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

உலக நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்தநிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் கடந்த மாதம் 20-ம் தேதி ஒரு முக்கிய  அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி ஆஸ்திரேலியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்ற, சர்வதேச பட்டதாரிகள் அந்நாட்டில் பணியாற்றும் தற்காலிக விசாவிற்கான அவகாசம் கூடுதலாக ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நகரங்களில் நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளில் இருந்து கல்விக்காக ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்கள், அங்குள்ள சிட்னி, மெல்பர்ன், பெர்த், பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் போன்ற முக்கிய நரகங்களிலேயே தங்கி படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில்  ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இது அந்நாட்டில் சேர்க்கை பெற்ற மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 12 புள்ளி 4 சதவீதமாகும். 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 புள்ளி 5 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது சீனா.  2லட்சத்துக்கு 55 ஆயிரம் சீனர்கள் ஆஸ்திரேலியாவில் படிப்புக்காக சென்றுள்ளனர். அதுபோல 52 நோபாளம் நாட்டை சேர்ந்தவர் களும் ஆஸ்திரேலியாவுக்கு கல்விக்காக சென்று 3வது இடத்தை பிடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.