சென்னை:

நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது. இதன் காரணமாக நீட் தேர்வை எதிர்த்து, இந்திய மாணவர் சங்கம் அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களை கைது செய்ய முயன்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததால், அந்த மாணவி மயக்க மடைந்தார். இதன் காரணமாக அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வை தடைசெய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மாணவர்கள் வந்தனர். அவர்களுக்கு போராட அனுமதி மறுத்ததை ஒட்டி  காவல்துறையினர் தடையை மீறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது,  நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்றும் அத்தகைய நீட் தேர்வை தடைசெய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றும் விதமாக காவல்துறையினர் வெறித்தனமாக ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. அப்போது போராடிய மாணவி ஒருவரின் துப்பட்டாவை பிடித்து பெண் காவலர்கள் இழுத்தபோது துப்பட்டா கழுத்தை இறுதி அந்த பெண் மயக்கமடைந்தார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அந்த பெண் மயக்கம் தெளிந்ததால் அமைதி ஏற்பட்டது. போராட்டக்கார்களை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.