புதுடெல்லி: பெல்ஜியத்திற்கு எதிராக புரோ லீக் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பாக, புரோ லீக் ஹாக்கித் தொடரின் இரண்டாவது சீஸன் உலகின் பல முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும், பிற அணியுடன் தலா இருமுறைகள் மோதும். தற்போதைய நிலையில் உலகளவில், இந்தியா ‘நம்பர் 5’ அணியாகவும், பெல்ஜியம் ‘நம்பர் 1’ அணியாகவும் திகழ்கிறது.
இப்போட்டிக்காக 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்ப்ரீத்சிங்(கேப்டன்), ஹர்மன்ப்ரீத் சிங்(துணைக் கேப்டன்), ஸ்ரீஜேஷ்(கோல் கீப்பர்), அமித் ரோஹிதாஸ், சுரேந்தர் குமார், விவேக் சாகர், ராஜ்குமார் பால், தில்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, எஸ்.வி.சுனில் மற்றும் குரிந்தர் சிங் உள்ளிட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.