டெஸ்ட் தரவரிசை – 3ம் இடத்திற்கு போனது இந்திய அணி!

துபாய்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பல மாதங்களாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முதலிடத்தை சிறிது இடைவெளிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி மீண்டும் பிடித்துள்ளது.

2019ம் ஆண்டு அணிகள் விளையாடிய 100% போட்டிகள் மற்றும் அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் விளையாடிய 50% போட்டிகள் கணக்கில் எடுக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் இந்திய அணியின் முதலிடம் பறிபோயுள்ளது.

ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், நியூசிலாந்து அணி 115 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், இந்திய அணி 114 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில், முதல் 3 இடங்களிலுள்ள அணிகளுக்கு இடையே, தலா 1 புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பதைக் காண முடியும்.

ஒருநாள் தரவரிசை

அதேசமயம், ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இங்கிலாந்து 127 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இந்திய இரண்டாமிடத்திலும், 116 புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாமிடத்திலும் நீடிக்கின்றன.