“இந்திய அணியில் வெற்றிடம் ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஸ்மித்

மெல்போர்ன்: இந்திய அணியில் ரோகித் ஷர்மா மற்றும் விராத் கோலியின் இல்லாமை, அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கணித்துள்ளார் ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.

அவர் கூறியுள்ளதாவது, “உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவரான ரோகித் ஷர்மா, டி-20, ஒருநாள் மற்றும் சில டெஸ்ட் போட்டிகளுக்கு இடம்பெறாதது, இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் டாப்-ஆர்டரில் பெரிய நம்பிக்கையளித்து வருகிறார்.

எனவே, அவர் இல்லாதது, அணியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தலாம். மேலும், முதல் டெஸ்ட் போட்டியுடன், கேப்டன் விராத் கோலி நாடு திரும்புவதும், இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதேசமயம், இந்திய அணியில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். இவர்கள் வெற்றிடத்தை நிரப்பக்கூடும்” என்றுள்ளார் ஸ்மித்.