ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – வெண்கலத்துடன் வெளியேறிய இந்தியா!

மணிலா: ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில், இந்தோனேஷியாவிடம் 2-3 என்ற கணக்கில் தோற்று, வெண்கலத்துடன் வெளியேறியது இந்தியா.

ஒற்றையர் பிரிவு போட்டியில் சாய் பிரனீத் பாதியில் வெளியேறியதால், அவரை எதிர்த்து விளையாடிய இந்தோனேஷியாவின் அந்தோணி ஜின்டிங் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் வென்றார். இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா ஜோடி வென்றது. மேலும், ஒற்றையர் பிரிவின் மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சுபாங்கர் வென்றார்.

இரட்டையர் பிரிவு இரண்டாவது போட்டியில், இந்தியாவின் லக்சயா சென் – ஷிராக் ஷெட்டி இணை தோற்றது. இதனால் 2-3 என்ற கணக்கில் அரையிறுதிப் போட்டியை இழந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கம் பெற்றது.

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் இந்தியா பெறுகின்ற இரண்டாவது வெண்கலப் பதக்கம் இதுவாகும்.