நியூயார்க்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை, அமெரிக்க மல்யுத்த வீரரும் நடிகருமான டிரிபிள் எச். பாராட்டியுள்ளார். கிரிக்கெட் உலகைக் கடந்த இந்தப் பாராட்டு ஆச்சர்யமூட்டியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா தொடரை நானும் பார்த்தேன். நேர வேறுபாடு காரணமாக லைவில் பார்க்க முடியவில்லை. ஆனாலும், மொத்தத் தொடரையும் கண்டுகளித்தேன். இந்தத் தொடர் எனக்கு மிகப்பெரிய வியப்பைக் கொடுத்தது. இந்தியாவின் ஆட்டம் எனக்கு மலைப்பை கொடுத்தது.

WWE போட்டிகளில் நடப்பதுபோல, இந்திய அணி பெரிய அளவில் திருப்பம் கொடுத்தது. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்தியா கொடுத்த கம்பேக் திரைப்பட கதை போல் இருந்தது. இந்திய அணியை தனிப்பட்ட வகையில் அழைத்துப் பாராட்ட வேண்டும்.

இந்தியர்கள் கண்டிப்பாக இந்த வெற்றியை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். இந்திய அணியுடன் சேர்ந்து இந்த வெற்றியைக் கொண்டாட நானும் விரும்புகிறேன். இந்திய அணி வீரர்கள் யாராவது எங்களைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசலாம்.

இந்திய அணி இன்னும் பல உயரங்களை தொட வேண்டும். இன்னும் இதேபோன்ற வெற்றிகளை இந்திய அணி குவிக்க வேண்டும். இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி வியப்பூட்டியுள்ளார்.