கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு..

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு..

இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த  2018 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

புலிகள் எண்ணிக்கையைக் கண்டறிய இந்தியா, தனது வனப்பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் உலக சாதனை புத்தமான ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற உள்ளது.

என்ன சாதனை?

எந்த ஒரு நாடும் செய்திராத வகையில் , அந்த ஆண்டு இந்தியா நமது வனப்பகுதியில் 141 பகுதிகளில் மொத்தம் 26 ஆயிரத்து 838 இடங்களில் (லொகேஷன்) காமெரா பொறிகளைப் பொருத்தி புலிகள் நடமாட்டம் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

இந்த காமெராக்கள் 3 கோடியே 48 லட்சத்து 58 ஆயிரத்து 623 போட்டோக்களை எடுத்து மெகா சாதனை புரிந்துள்ளது.

 இந்த சாதனை தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

-பா.பாரதி

கார்ட்டூன் கேலரி