கொரோனா மற்றும் மோடி அரசின் பொருளாதார சீரழிவு நடவடிக்கைகளின் காரணமாக, வட இந்தியாவின் ஏழைக் குழந்தைகள், குறிப்பாக பழங்குடியின குழந்தைகள் பெரும் ஊட்டச் சத்து குறைபாட்டிற்கு உள்ளாகியுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்தக் குழந்தைகளில் மூன்றில் ஒருவர், தங்களது வயதுக்கேற்ற வளர்ச்சியைவிட, குறைவான வளர்ச்சியையே எட்டியுள்ளனர்.

பலர், அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் சத்துணவை எதிர்பார்த்திருக்கும் சூழலில், அங்கே விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா முடக்கம் காரணமாக, ரேஷன் பொருட்களும் சரியாக கிடைக்காத நிலை.

ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், அங்கன்வாடி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டையும் சேர்த்து வழங்கப்பட, பாரதீய ஜனதா ஆளும் மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில், சைவ உணவுப் பழக்கம் என்ற பெயரில், குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுவதில்லை.

இதனால், சம்பந்தப்பட்ட குழந்தைகள் பெரியளவிற்கு பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் பால் வழங்குகிறோம் என்ற பெயரில், அதிகளவு தண்ணீர் கலந்த பால் வழங்கப்படுகிறது. எனவே, இதனால் ஒரு புண்ணியமும் இருப்பதில்லை.

எனவே, மேட்டுக்குடி சமூகத்தினரின் வெட்டி மனோபாவத்திற்காக, ஏழை குழந்தைகள் கடும் விலை கொடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது.