இந்திய விசா கட்டண உயர்வால் சுற்றுலா பாதிக்கும்…மலேசியா தமிழர்கள் கண்டனம்

கோலாலம்பூர்:

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இங்கு ஏராளமான தமிழர்கள் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அதோடு ஆயிரகணக்கான தமிழர்கள் மலேசியாவில் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்தியாவுக்கான விசா கட்டணத்தை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. 120 அமெரிக்க டாலராக (462.56 ரிங்கிட்) கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது தமிழர்களை அச்சுறுத்தும் செயல் என்று தமிழர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா துறை வெகுவாக பாதிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

 

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலை தளங்களில் கண்டனங்கள் அதிகரித்துள்ளது. மேலும், இதனால் சுற்றுலா பாதிக்கும் என்று மலேசிய தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.