மெர்சல்: பேசும்போதுதான் இந்தியா ஒளிரும்! கமல்

சென்னை,

டிகர் விஜய் நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து அவர் பேசும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாரதியஜனதா கட்சியினர் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜவின் எதிர்ப்புக்கு பலர்  கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் கமலஹாசனும் தனது பதிலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், மெர்சலுக்கு ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம். தர்க்கரீதியான எதிர்மறை விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும். பேசும் போதுதான் இந்தியா பிரகாசிக்கும்.