சர்வதேச நாணய முறை நிதிய பொருளாதார நிபுணராக இந்தியப் பெண் நியமனம்

ஹார்வர்ட்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை கீதா கோபினாத் சர்வதேச நாணயமுறை நிதியத்தில் பொருளாதார நிபுணராக நியமிக்கபட்டுள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியையான கீதா கோபினாத் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்.   தற்போது இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார்.  இவர் வாஷிங்டன் மற்றும் டில்லி பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர் ஆவார்.   அமெரிக்க பிரின்ஸ்டன்  பல்கலைக்கழகத்தில் இவர் பி எச்டி பட்டம் பெற்றுள்ளார்.

பி எச் டி முடித்த பின் கடந்த 2001 ஆன் வருடம் இவர் சிகாகோ பட்டப்படிப்பு பள்ளியில் துணை பேராசிரியையாக பணி புரிந்தார்.  அதன் பிறகு ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியில் சேர்ந்தார்.  கடந்த 2010 அம் வருடம் அவர் துறை தலைமையாளர் ஆனார்.

தற்போது சர்வதேச நாணயமுறை நிதியத்தின் (INTERNATIONAL MONETARY FUND) இவர் பொருளாதார நிபுணராக நியமிக்கபட்டுள்ளார்.   இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கபடும் இரண்டாமிந்தியர் என்னும் பெருமையை கீதா அடைந்துள்ளார்.    இதற்கு முன்பு இந்த பதவியில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இருந்துள்ளார்.