ஆஸ்திரேலிய அணியை வென்ற இந்திய பெண்கள் ‘ஏ’ அணி!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியப் பெண்கள் ‘ஏ’ அணி, அந்நாட்டு பெண்கள் ஏ அணியை, ஒருநாள் போட்டியில் 16 ரன்களில் வென்றுள்ளது.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், பிரிஸ்பேனில் நடைபெற்றது முதல் போட்டி. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 312 குவித்தது.

ஷபாலி வர்மா 78 பந்துகளில் 124 ரன்களை விளாசினார். மொத்தத்தில் டி20 இன்னிங்ஸ் ஆடினார். வேதா கிருஷ்ணமூர்த்தியும் 113 அடித்தார்.

அடுத்த களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியால், 296 ரன்களே எடுக்க முடிந்தது. அந்த அணியின் தகிலி 97 ரன்களும், அன்னாபெல் 52 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய பெண்கள் ஏ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.