இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது

மும்பை

ந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிக்கு இடையில் ஒரு நாள் கிரிக்கெட்  போட்டி நடைபெறுகிறது.   இதில் மும்பையில் இரண்டாம் நாள் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.    இந்த அணியால் இந்திய மகளிர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே திணறியது.

நதாலி சிவர் மட்டும் 85 ரன்கள் எடுத்தார்.  மற்ற வீராங்கனைகள் மிகவும் குறைந்த ரன்களில் ஆட்டம்  இழந்தனர்.   43.3 ஓவர்களில் இந்த அணி 169 ரன்களுக்கு ஆட்டம்  இழந்தது.   இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி மற்றும் சிகா பாண்டே தலா 4 விக்கட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 43.1 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கான162 ரன்களை எட்டியது.  மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இப்போது இரண்டாம் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது.