ஆசிய மல்யுத்தம் – தங்கம் அள்ளிய இந்திய வீராங்கனைகள்!

அல்மாட்டி: கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்றுவரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், 3 இந்திய வீராங்கனைகள் பல்வேறு எடைப்பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளனர்.

வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவிலும், அன்ஷு மாலிக் 57 கிலோ எடைப்பிரிவிலும், திவ்யா 72 கிலோ எடைப்பிரிவிலும் தங்கத்தை தட்டிச் சென்றனர்.

53 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், சீனதைபே நாட்டின் மெங் ஹசுவானை எதிர்கொண்டு 6-0 என்ற கணக்கில் வென்று, தங்கம் பெற்றார் வினேஷ் போகத். அதேபோல், 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், மங்கோலியாவின் பேட்செட்செக்கை எதிர்கொண்டு, 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து, தங்கம் வென்றார் அன்ஷு மாலிக்.

அதேபோன்று, பெண்களுக்கான 72 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் திவ்யா, தான் பங்கேற்ற மூன்று போட்டியிலும் வென்று, தங்கத்தை தட்டிச் சென்றார்.