சர்வதேச டி20 தரவரிசை – இந்திய பெண்கள் அணிக்கு மூன்றாமிடம்!

துபாய்: டி-20 போட்டியின் அடிப்படையில் பெண்கள் அணிகளுக்கென்று ஐசிசி வெளியிட்ட சர்வதேச தரவரிசைப் பட்டியலில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

இப்பட்டியில், 291 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும், 280 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாமிடத்திலும் நீடிக்க, 270 புள்ளிகளுடன் நான்காமிடத்திலிருந்து மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

இதற்கு முன்னர் 3வது இடத்திலிருந்த நியூசிலாந்து அணி, 269 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

அதேசமயம், ஒருநாள் போட்டிகள் அடைப்படையிலான பெண்கள் அணிகளில், முதல் 3 இடங்களில், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.