இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 7விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது.

indian

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து இன்று 2வது ஒருநாள் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமி மற்ரும் ஷிகா பாண்டே அதிரடி பந்து வீச்சினால் தலா 4விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஸ்கிவர் மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ர்னகள் சேர்த்தார்.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறாங்கியது. இந்திய அணியின் தொடங்க வீராங்கனை ரோட்ரிக்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து வந்த ஸ்மிருதி மந்தனா 63 ரன்கள் சேர்ந்தார். அடுத்து வந்த பூனம் ரவுத் 32 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 43 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி 41.1 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு தனது இலக்கான 162 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.