மாலத்தீவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி ராஜாவின் உடல் சொந்த ஊருக்குச் சென்றது

--

சென்னை:

மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல்  சென்னைக்கு விமானம் மூலம் வந்தது. சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ராஜாவின் சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் உடல் ஏற்றிச் செல்லப்பட்டது.

ராஜா
ராஜா

சென்னையில் இருந்து ராஜாவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு, தமிழக அரசின் “அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை” உடனடி நடவடிக்கை எடுத்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தது. இத்துறை, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது உதவி செய்கிறது. அதே போல தமிழகத்தில் அகதிகள் நலனை பேணி வருகிறது.