பாங்காக்: தாய்லாந்து ஓபன் வேர்ல்டு டூர் 500 டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இவர்கள் சீனாவைச் சேர்ந்த உலக சாம்பியன்களான லி ஜுன் ஹுய் மற்றும் லியூ யு சென் ஆகியோரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வெற்றி 21-19, 18-21, 21-18 ஆகிய செட் கணக்குகளில் பெறப்பட்டது.

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் முன்னதாக, ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர்கள் மற்றும் முன்னாள் உலக சாம்பியன்கள் ஆகியோரை வீழ்த்தியிருந்தனர். அவர்கள் தங்களின் போட்டியை எந்தவித பயமுமின்றி, தங்களின் ஸ்டைலில் விளையாடியதே வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தாங்கள் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை என்று தெரிவித்துள்ளனர் அந்த இணையர்.

இந்த வெற்றியின் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 10 வீரர்களின் வரிசைக்கு முன்னேறியுள்ளனர். மேலும் வேர்ல்டு டூர் 500 போட்டியில் இரட்டையர் பட்டத்தை இந்தியா வெல்வது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.