வாஷிங்டன்:

ஹெச் 1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி அல்லது கணவர் அல்லது குழந்தைகளுக்குகளுக்கு ஹெச் 4 விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதியை 2015ம் ஆண்டு ஒபாமா நிர்வாகம் வழங்கியது. 2017ம் ஆண்டு ஜூன் வரை ஹெச்1பி விசா வைத்திருந்த 71,287 உறவினர்கள் பயனடைந்தனர். இதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள்.

இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.