கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல அச்சப்படும் இந்தியர்கள்: ஆய்வில் வெளியான தகவல்

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல இந்தியர்கள் அச்சப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதேவேளையில் குணம் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், இந்தியாவில் கொரோனா குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவகள் வெளியாகி இருக்கின்றன.

அதில் அதிக சதவீதம் பேர் தம்மால் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக மருத்துவமனை செல்ல அச்சப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.அதாவது, 5 சதவீதம் மக்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிடுவோர்களோ என்ற நிலையை நினைத்து கவலைப்படுவதாகக கூறி உள்ளனர்.

29 சதவீதம் பேர் குடும்பத்தினருக்கோ, சக ஊழியர்களுக்கோ பரப்பி விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர். 22% பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற பயமாகவும், 8% பேர் பாதிப்பு எண்ணிக்கை குறித்தும், 6% பேர்  அதிகாரிகளை நினைத்தும் பயப்படுவதாக கூறியுள்ளனர்.

70% பேர் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வருமானம் குறைந்துள்ளதை நினைத்தும் பயம் கொண்டுள்ளனர். 13% பேர் எதை நினைத்தும் பயமில்லை என்று கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல அச்சப்படுவது ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளன.

உறவுகள், நண்பர்கள், சக ஊழியர்கள், அண்டை வீட்டார், சுற்றத்தாரிடம்  கொரோனாவின் தாக்கம் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதன் முடிவில், 31% பேர் 6 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்தவர்களே என்று பதிலளித்துள்ளனர்.

34% பேர்  பாதிக்கப்பட்டவர்களில் 5 பேரை சந்திப்பதாகவும், 12% பேர்  கொரோனா தொற்று உள்ளவர்கள் என்று தெரிந்தும் பேசுவதாக கூறுகின்றனர். ஒட்டு மொத்தமாக பார்க்கையில், 77% இந்தியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளை சந்தித்து கொண்டு தான் இருக்கின்றனர் என்பது தெளிவாகிறது.