கொரோனாவுக்கு எதிராக இந்தியர்களும் இந்தியர்களுக்கு எதிரான பாஜக ஐடி பிரிவும் : ஆங்கில ஊடகம் – இறுதிப் பகுதி

டில்லி

பாஜகவின் ஐடி பிரிவு தவறான பல செய்திகளைப் பரப்பி வருவதாக தி பிரிண்ட் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மக்களில் பலர் இந்த ஊரடங்கால் பணிகளுக்குச் செல்ல முடியாத நிலை உண்டாகி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.   குறிப்பாக வெளி மாநிலத் தொழிலாளிகள், வீடற்றோர், தினக் கூலித் தொழிலாளர்கள் போன்றோர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  ஆயினும் அனைவரும்  கொரோனாவுக்கு எதிராகப் போராடுகின்றனர்

தற்போதைய நிலை குறித்து ஆங்கில ஊடகமான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் 3 ஆம் மற்றும் இறுதி பாகம் வருமாறு :

முதல் இரு பாகங்களைப் படிக்க :https://www.patrikai.com/bjp-it-cell-spreading-false-information-during-corona-period-part-1/

https://www.patrikai.com/indians-against-corona-and-bjp-it-cell-against-indians-part-2/

பிரதமர் அறிவித்த தேசிய ஊரடங்கு வெறும் நான்குமணி நேர அவகாசத்தில் அளிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தனர்.  போக்குவரத்து வசதிகள் இன்றி பசித்த வயிற்றுக்கு உணவும் இன்றி தங்கள் ஊரை நோக்கி நூற்றுக்கணக்கான கிமீ தூரத்தை நடந்தே கடந்தனர்.   பாஜக ஐடி செல் இந்த ஊரடங்கு மூன்று மாதம் வரை நடக்கும் என அப்போது தகவல்கள் வெளியிட்டன   இந்த தகவல்களை யார் அவர்களுக்கு அளித்தார்கள்?  மக்களுக்கு பாஜக ஐடி குழுவைத் தவிர வேறு யாரும் அதிகம் தகவல்கள் தராததால் அவர்கள் தரும் பொய்த்தகவல்களே அதிகம் பேரைச் சென்றடைந்தன.

டில்லி அரசு வெளி மாநில தொழிலாளர்கள் வீடுகளில் மின்சாரத்தை நிறுத்தப் போவதாக பாஜக ஐடி குழு அளித்த தகவல் மக்களை மேலும் பீதியடைந்து ஊரை விட்டே ஓட வைத்தது.

அதன் பிறகு தப்லிகி ஜமாத் செய்தி வெளியானது.  அது பாஜக ஐடி குழுவுக்குக் கிடைத்த ஒரு புதையலாக மாறியது.  தப்லிகி ஜமாத் அமைப்பினர் டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.  அவர்களால் கொரோனா பரவியதாக வந்த செய்திகளை வைத்து இஸ்லாமியர் அனைவரையும் அவமானப்படுத்தி முழுப் பழியையும் அவர்கள் மீது பாஜக ஐடி குழு சுமத்தியது. இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே கொரோனாவை நாடெங்கும் பரப்புவதாக செய்திகள் வந்தன.  அனைத்து மதங்களிலும் கொரோனா குறித்த புரிதல் இல்லை என்பதைக் குழு கவனம் கொள்ளவில்லை.

மொத்தத்தில் இந்தியர்கள் கொரோனவுக்கு எதிராகப் போராடி வரும் போது பாஜக ஐடி குழு ஒரு சில இந்தியர்களுக்கு எதிராகப் போரிட்டு வந்துள்ளது.  இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் மீது தனக்கிருந்த அரசியல் விரோதத்தைத் தீர்க்க இந்த சமயத்தை அந்தக்குழு பயன்படுத்தியது.  இதன் மூலம் அக்குழுவுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?  மக்களிடையே பொறுப்புணர்ச்சியை வளர்த்து நாட்டின் அமைதியைக் குலைக்கும் தனது எண்ணத்தை நிறைவேற்ற முடியும்.   ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் பாஜக ஐடி குழு செய்யும் பணிகளை தற்போதும் செய்து வருகின்றன.

எனவே தேர்தல் இல்லாத சமயத்திலும் பாஜக ஐடி குழு எதையும் செய்ய முடியும் என்பது தெளிவாகி உள்ளது.  இது இந்திய மக்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் நிரந்தர அச்சுறுத்தல் ஆகும்.