கொரோனாவுக்கு எதிராக இந்தியர்களும் இந்தியர்களுக்கு எதிரான பாஜக ஐடி பிரிவும் : ஆங்கில ஊடகம் – பகுதி 2

டில்லி

பாஜகவின் ஐடி பிரிவு தவறான பல செய்திகளைப் பரப்பி வருவதாக தி பிரிண்ட் ஆங்கில  ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மக்களில் பலர் இந்த ஊரடங்கால் பணிகளுக்குச் செல்ல முடியாத நிலை உண்டாகி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.   குறிப்பாக வெளி மாநிலத் தொழிலாளிகள், வீடற்றோர், தினக் கூலி தொழிலாளர்கள் போன்றோர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  ஆயினும் அனைவரும்  கொரோனாவுக்கு எதிராகப் போராடுகின்றனர்

தற்போதைய நிலை குறித்து ஆங்கில ஊடகமான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் 2 ஆம் பாகம் வருமாறு :

முதல் பாகத்தை படிக்க : https://www.patrikai.com/bjp-it-cell-spreading-false-information-during-corona-period-part-1/

கடந்த பிப்ரவரி மாதம்  உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த போது பாஜக ஐடி பிரிவு கோமயம் மற்றும் பசுஞ்சாணியின் பயன்கள் குறித்து மக்களுக்கு தெரிவித்து வந்தது.   வாட்ஸ்அப் குழுக்களில் கோமியத்தைப் பருகுவது, வீடுகளைச் சாணிக் கொண்டு மெழுகுவது ஆகியவற்றால் கொரோனாவை தூர விலக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.  அதற்கு ஆயுர்வேத சாயம் பூச வேப்பிலையும்  சேர்க்கப்பட்டது.  அதை ஆன்மீகமாக்க இருக்கும் மகன்களின் எண்ணிக்கையைப் பொருத்து விளக்கேற்ற வேண்டும் என சொல்லப்பட்டது.

ஆனால் என்ன ஆனது?  மார்ச் மாதத்துக்குள் கொரோனா இந்தியாவில் பல இடங்களில் பரவியது.  ஐந்து அல்லது ஆறு நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு ஆனது.  ஆனால் அப்போது பாஜக ஐடி பிரிவு டிரம்ப் பேரணி,, இந்தியா விஸ்வகுரு ஆனது, பல நாடுகளில் கொரோனா பரவுவது குறித்து செய்திகள் வெளியிட்டது.   மோடி அரசு முழு ஊரடங்கு அறிவிக்கும் வரை பாஜக ஐடி பிரிவு தொடர்ந்து தவறான தகவல்கள் மட்டுமே தந்தது.   இதனால் மக்கல் இதைப் பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் இருந்தனர்.

அத்துடன் நிற்காமல் பிரதமர் மக்கள் ஊரடங்கு அறிவித்த போது பானைகளையும் தட்டுகளையும் வைத்து  ஒலி எழுப்பிய செய்திகளைப் பரப்பி ஒலியின் மூலம் கொரோனா விரட்டப்பட்டதாகச் செய்தி பரப்பப்பட்டது.   கடந்த வெள்ளி அன்று மின் விளக்கை அணைத்து தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றச் சொன்னபோது அதற்கும் போலியான விஞ்ஞான விளக்கம் தரப்பட்டது.

 

இந்த செய்தியின் மூன்றாம் மற்றும் இறுதிப் பகுதி விரைவில்….