விலை அதிமாக உள்ளதால் ஆப்பிள் போனை வாங்காத இந்தியர்கள்

பெங்களூரு

ப்பிள் போனுக்கு உலகெங்கும் கடும் வரவேற்பு உள்ள நேரத்தில் இந்தியர்கள் விலை உயர்வு காரணமாக வாங்குவதில்லை என கூறப்படுகிறது.

உலகெங்கும் ஆப்பிள் ஐபோனுக்கு கடும் வரவேற்பு உள்ளது. இளைஞர்களின் விருப்பம் அனைத்தும் ஆப்பிள் போனில் இருப்பதாக கூறப்படுகிறது. ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு ஆய்வில் கடந்த 2017 ஆம் வருடத்தில் இருந்து விற்பனை குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. சென்ற வருடம் ஆப்பிள் போன்களின் விற்பனை 30 லட்சமாக இருந்த நிலையில் இந்த வருடம் வெறும் 20 லட்சமாகும் என சொல்லப்படுகிறது.

இந்த விற்பனை இந்தியாவில் பெருமளவு குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆப்பிள் போன்களின் விலையே ஆகும். ஒரு ஆப்பிள் ஐபோனின் விலை சுமார் ரூ. 75 ஆயிரம் அல்லது ரூ. 1 லட்சம் வரை ஆகிறது. இந்த விலையில் இந்தியாவில் இதே போல் கட்டமைப்பு கொண்ட 3 மொபைல்கள் வாங்க முடியும். அது மட்டுமின்றி மிக விலை உயர்ந்த லாப் டாப் இதே விலையில் வாங்க முடியும்.

இது குறித்து இந்தியாவின் சிலிகான் வேலி எனக் கூறப்படும் பெங்களூருவில் வேலை பார்க்கும் ஒரு மென்பொருள் பொறியாளர், “நான் ஐபோனை இதுவரை உபயோகித்ததில்லை. அதை வாங்க மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதன் பிறகு தான் அது புத்திசாலித்தனமானது அல்ல என்பதை உணர்ந்தேன். நான் இந்த ஐபோனின் கட்டமைப்புக்களை ஆராய்ந்த போது அதே தரத்தில் அதை விட பன்மடங்கு குறைவான போன்கள் கிடைப்பதால் ஐபோன் வாங்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன்” என கூறி உள்ளார்.

இது குறித்து ஐபோன் விற்பனையாளர், “உலக நாடுகளில் இந்தியாவில் மட்டுமே ஐபோன்கள் மிகவும் விலை உயர்வாக உள்ளன. இதற்கு முக்கிய கரணம் இறக்குமதி தீர்வைகள் அதிகமாக உள்ளதே ஆகும். இறக்குமதி தீர்வையே 70-80% உள்ளது. அது மட்டுமின்றி தற்போது இதே தரத்தில் பல நிறுவனத்தினர் மொபைல்களை வெளியிட்டுள்ளனர் . அவைகள் ஐபோன் அளவுக்கு உழைக்காது எனினும் மக்கள் அத்தகைய போன்களையே விரும்புகின்றனர்” என தெரிவித்துள்ளார்.