ரியாத்

வுதியில் புதிதாக குடும்ப வரி என்னும் வரி விதிக்கப்பட உள்ளது.  இது சவுதி வாழ் இந்தியர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கி உள்ளது.

சவுதி அரேபியாவில் வரும் ஜூலை 1 முதல் குடும்ப வரி அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு விதிக்கப் பட உள்ளது.  அதன் படி வெளிநாட்டார் தங்களுடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு மாதத்துக்கு ஒருவருக்கு 100 ரியால் என்னும் கணக்கில் வரி செலுத்த வேண்டும்,   இது இந்திய மதிப்பின்படி கிட்டத்தட்ட ரூ 1700 க்கு சமம்.

சவுதி வாழ் வெளிநாட்டினரில் இந்தியர்கள் தான் அதிகம்.  இந்தியர்களில் பலர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகின்றனர்.  உதாரணமாக மூன்று உறுப்பினர்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால் மாதத்துக்கு ரூ 5100 வரி செலுத்த வேண்டி வரும், இந்த வரி வருடா வருடம் மேலும் அதிகரிக்கும்.  அப்படி இருப்பின் 2020 ல் இன்னும் பல மடங்கு வரி செலுத்த வரும்.

கவலையுற்ற இந்தியர்களில் பலர் தங்களின் குடும்பத்தை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் எண்ணத்தில் உள்ளனர்.

இது பற்றி இந்திய அமைச்சகத்தை கேட்ட போது, இது இந்தியாவுக்கு மட்டும் அல்ல, சவுதியில் உள்ள அத்தனை நாட்டினருக்கும் பாதிப்பை உண்டாக்கும் எனக் கூறி உள்ளது