குவைத்தில் பொது மன்னிப்பு அளித்தும் நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் தவிப்பு…..தொழிலாளர்கள் குமுறும் வீடியோ

குவைத்:

குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவிததுள்ளது. ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை பொது மன்னிப்பு காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருக்கும் 1.30 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்ள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபராதம் இல்லாமல், எந்த துறை அதிகாரியின் அனுமதி பெறாமல் விமானநிலையம் அல்லது துறைமுகம் வழியாக வெளியேறலாம்.

தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்க விரும்புபவர்கள் அபராதம் செலுத்தி, முறையான விசா பெற்று தொடர் ந்து வசிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. சட்ட விரேதமாக தங்கியருந்த காலத்தில் நாள் ஒன்றுக்கு 7 டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது.

குவைத் அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை இந்திய தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள, அங்குள்ள இந்திய தூதரகம் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. தூதரகம் முன்பு ஆயிரகணக்கான இந்திய தொழிலாளர்கள் இன்று காலை முதல் கூடியுள்ளனர். ஆனால் தூதரக பிரதான நுழைவு வாயில் கூட திற க்கப்படவில்லை.

இது குறித்து ஒரு இந்திய தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ‘‘இன்று காலை முதல் 2 ஆயிரம் பெண்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு கூடியுள்ளனர். ஆனால், கதவுகள் கூட திறக்கப்படவில்லை’’ என்றார்.

இதேபோன்ற கருத்துக்களை பல தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்திய தொழிலாளர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.