டில்லி

டந்த 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016-17 வரை பொருளாதார வளர்ச்சி 7%க்கு பதிலாக 4.5% மட்டுமே வளர்ந்துள்ளதாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்திய புள்ளியியல் அலுவலகம் கடந்த 2011-12 கணக்கு ஆண்டிலிருந்து 2017-18 ஆண்டு வரையிலான பொருளாதார வளர்ச்சி அதாவது உள்நாட்டு மொத்த உற்பத்தி 7% சராசரியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டது   அப்போது இதற்கு முந்தைய கணக்கெடுப்பான 2004-05 ஆம் வருட அடிப்படை மாற்றப்பட்டு 2011-12 ஆம் வருட வளர்சி அடிப்படை ஆக்கப்பட்டது.

இத்துடன் கார்பரேட் விவகார அமைச்சரவையில் எம் சி ஏ 21 விவரங்களும் பல புதிய மாறுதல்கள் குறித்த தகவல்களும் இந்த வளர்ச்சி விகிதத்தில் சேர்க்கப் பட்டன. அதாவது அப்போது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் இடையிலான வளர்ச்சி மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. இதன்படி சராசரியாக 6.98% வளர்ச்சி அடைந்துள்ளதாக அப்போது கணக்கிடப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன், “உண்மையில் வளர்ச்சி என்பது முந்தைய 2004-05 வருட அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலையில் அது திடீரென 2011-12 ஆம் ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இது இரு அரசுகளுக்கு இடையில் ஆன ஒப்பிடுதலுக்கு மட்டுமே சரி ஆகும். மொத்த வளர்ச்சியை இவ்வாறு கணக்கிட முடியாது.

உண்மையில் பழைய அடிப்படையின் படி கணக்கிடும்போது தற்போது வேலை இன்மை அதிகரித்துள்ளது. இது முக்கிய வளர்ச்சி இனங்களை பெரிதும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் தனி மனித பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே வேலை இழந்தோர் கணக்கை நாம் பார்க்கும் போது பொருளாதார வளர்ச்சி வருடத்துக்கு 4.5% மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆனால் அரசு அறிவித்ததோ 7% ஆகும். ஆகையால் வளர்ச்சி 2.5% அதிகரித்து காட்டப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி கணக்கிடுதலில் புதிய வேலை வாய்ப்பு சதவிகிதத்தின் அடிப்படையில் உற்பத்தி கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் வேலை இழந்தோரின் எண்ணிக்கையில் புதிய வேலை வாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கையில் இருந்து நீக்கி கணக்கிடப்பட வேண்டும். இந்த ஒரு சிறு தவறினால் பொருளாதார வளர்ச்சி 2.5% அதிகரித்துள்ளதாக உள்ளது” என தெரிவித்துளார்.