வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை

ஐக்கிய அமீரகம் உட்பட வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிற்கு செல்வதற்கு 24மணி நேரத்திற்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 10 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு சென்று பல சிக்கல் மற்றும் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அரசின் கவனத்தை ஈர்த்தது.

uae

இதற்கு தீர்வுக்காணும் நோக்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐக்கிய அமீரகத்திற்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் 24 மணி நேரத்திற்குள் தங்கள் முழு தகவல்களையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். வேலை வாய்ப்பு மற்றும் வேலைவாப்பு அல்லாத விசாவில் செல்பவர்களும் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். www.emigrate.gov.in. என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு இந்த புதிய விதியை வெளியுறவுத்துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ளதாக கூறியுள்ளது. ஜனவரி மாதம் முதல் அனைத்து விமான நிலையங்களிலும் வேலைக்கான விசா அல்லாத பாஸ்போர்ட்டில் செல்லும் அனைத்து நபர்களின் தகவல்களும் பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பெக்ரைன், இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், குவைத், லெபனன், லிபியா, மலேசியா, , ஓமன் கத்தார், சவுதி அரேபியா, சூடான், தெற்கு சூடான், தாய்லாந்த், சிரியா, ஐக்கிய அரபு அமீரகம் மறும் ஓமன் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் தகவல்களை பதிவு செய்ய இந்திய அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய விதி 2019 ஜனவரி 1ம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேலை ஒப்பந்தம், சுரண்டல், மனித கடத்தல் மற்றும் கல்வியறிவில்லாத இந்தியர்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த புதிய விதியை அரசு கொண்டுவந்துள்ளது. அவ்வாறு வெளிநாடு செல்லும் நபர்களின் விவரங்கள் பதிவு செய்தபின்னர், எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் சென்றுவிடும்.

இது மட்டுமின்றி வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்கள் 1800113090 அல்லது 01140503090 என்ற இலவச தொலைபேசி அழைப்பையும், helpline@mea.gov.in என்ற இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து உறுதிப்படுத்தி கொள்ளலாம் என வெளியுறவுத்துறை அமைச்சக்ம் கூறியுள்ளது.