இந்தியர்கள் தினமும் 3 மணி 44 நிமிடம் டி வி பார்க்கிறார்கள் : ஆய்வுத் தகவல்

மும்பை

ந்தியர்கள் ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் 44 நிமிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்வுகள் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்படுவதாக பொதுவாக கருத்து நிலவுகிறது.  பல ஊடகங்களில் பெண்கள் தொலைக்காட்சி நிகழ்வுகளில்  மூழ்கி விடுவதாக தெரிவிக்கின்றன.  இந்நிலையில் ஒளிபரப்பு ஆய்வு கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

அந்த ஆய்வறிக்கையில், “இந்தியர்கள் அதிகம் தொலைக்காட்சி நிகழ்வுகளை காண்பதாக ஒரு தகவல் உள்ளது.   அதன் உண்மைத் தன்மையை ஆராய ஒரு ஆய்வு நடட்தப்பட்டது.  இதில் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள 3 லட்சம் வீடுகளில் பார்க்கப்படும் நிகழ்வுகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் ”நகரத்திலுள்ள வீடுகளில் சராசரியாக 4 மணி நேரம் 6 நிமிடங்களும் கிராமப்புறங்களில் 3 மணி நேரம் 27 நிமிடங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள்.    மொத்த இந்தியாவிலும் சராசரியாக 3 மணி நேரம் 44 நிமிட்ங்கள் தொலைக்காட்சி நிகழ்வுகள் பார்க்கபடுகின்றன.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 4.5% உயர்ந்துள்ளது.  தற்போதும் தொலைக்காட்சி இல்லாத வீடுகளின் என்ணிக்கை உள்ளன.   மொத்தம் கணக்கெடுக்கப்பட்ட 29.8 கோடி வீடுகளில் 19.7 கோடி வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி உள்ளது.” என தெரிவிக்கப் பட்டுள்ளது.