Random image

இந்தியாவின் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு!

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவிய இந்தியாவின் 6 இளம் வீரர்களுக்கு, தார் எஸ்வியு ஜீப் பரிசளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் மகிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மகிந்திரா.

இதுதொடர்பாக ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளதாவது, “இவர்கள்தான் உண்மையான எழுச்சியின் கதைகள்! தடைகளைத் தாண்டி சிறப்பான விஷயங்களைச் செய்துள்ளார்கள். வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஊக்கமாக இவர்கள் இருக்கிறார்கள்.

இந்த 6 வீரர்களுக்கும் என்னுடைய மகிழ்ச்சிக்காக, தார் எஸ்வியு ஜீப்பைப் பரிசாக என்னுடைய பணத்தில் வழங்குகிறேன். நிறுவனத்தின் பணத்தில் அல்ல.

இந்தப் பரிசு வழங்குவதற்குக் காரணம், இளம் வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சிராஜ், ஷர்துல், ஷுப்மான் கில், நடராஜன், நவ்தீப் ஷைனி, வாஷிங்டன் ஆகியோர் மகிந்திரா ஜீப் பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார் ஆனந்த் மகிந்திரா.