காமன்வெல்த் 2018 : மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா

கோல்ட் கோஸ்ட்

காமன்வெல்த் 2018 போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் 2018 போட்டிகளில் இன்று 65 கிலோ எடைப் பிரிவில் மல்யுத்த இறுதிச் சுற்று நடைபெற்றது.

இதில் இந்தியாவை சேர்ந்த பஜ்ரங் புனியாவுக்கும் இங்கிலாந்தின் செரிக் கேனுக்கும் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் இந்தியாவை சேர்ந்த பஜ்ரங் புனியா வெற்றி பெற்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை அளித்துள்ளார்.