இந்தியாவின் 2021 சாம்பியன் கோப்பை போட்டிகள் உலகக் கோப்பையாக மாற்றம்

கொல்கத்தா

ரும் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள சாம்பியன் கோப்பை 20 ஓவர் போட்டிகள் உலகக் கோப்பை போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கமிட்டி அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் கமிட்டி பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது.  ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக அமிதாப் சௌத்ரி கலந்துக் கொண்டார்.  அப்போது நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்த விவாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது.

நேற்று இந்தக் கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி சர்வதேச கிரிக்கெட் கமிட்டி தலைவர்  டேவ் ரிசர்ட்சன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “உலகக் கோப்பை போட்டிகளின் காலத்தை மாற்ற விவாதம் செய்யப்பட்டது.    வரும் 2021ஆம் வருடம் இந்தியாவில் நடைபெற  உள்ள 20 ஓவர் சாம்பியன் கோப்பை பந்தயங்களை உலகக் கோப்பை பந்தயங்களாக மாற்ற அனைத்து பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

இதன் படி வரும் 2019 ஆம் வருடமும் 2023 ஆம் வருடமும் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருந்தது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   அத்துடன் சாம்பியன் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

You may have missed