டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,05,637 ஆக உயர்ந்து 25,609  பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 35,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 10,05,637 ஆகி உள்ளது.  நேற்று 680 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 25,609 ஆகி உள்ளது.  நேற்று 22,867 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,36,602 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,036 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,641 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,84,281 ஆகி உள்ளது  நேற்று 266 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,194 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,527 பேர் குணமடைந்து மொத்தம் 1,58,140  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,549 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆகி உள்ளது  இதில் நேற்று 69 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,106 பேர் குணமடைந்து மொத்தம் 1,07,416 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,18,648 ஆகி உள்ளது  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,545 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,994 பேர் குணமடைந்து மொத்தம் 97,693 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,169 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 51,422 ஆகி உள்ளது  இதில் நேற்று 104 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1037 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1263 பேர் குணமடைந்து மொத்தம் 19,730 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 919 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 45,567 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,090 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 828 பேர் குணமடைந்து மொத்தம் 32,174 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.