டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,25,222 ஆக உயர்ந்து 49,134 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 65,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 25.25,222 ஆகி உள்ளது.  நேற்று 990 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 49,134 ஆகி உள்ளது.  நேற்று 56,920 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,07,556 ஆகி உள்ளது.  தற்போது 6,68,044 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 12,608 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,72,734 ஆகி உள்ளது  நேற்று 364 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,063 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,484 பேர் குணமடைந்து மொத்தம் 4,01,442  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,890 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,26,245 ஆகி உள்ளது  இதில் நேற்று 117 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,514 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,556 பேர் குணமடைந்து மொத்தம் 2,67,015 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,943 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,475 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,779 பேர் குணமடைந்து மொத்தம் 1,80,703 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,908 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,11,108 ஆகி உள்ளது  இதில் நேற்று 104 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 3,718 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,940 பேர் குணமடைந்து மொத்தம் 1,28,182 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1192 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,5,652 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,178 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 790 பேர் குணமடைந்து மொத்தம் 1,35,108 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.