இந்தியாவில் கொரோனா பாதிப்பு 48.45  லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,45,003 ஆக உயர்ந்து 79,754 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 93,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 48.45,003 ஆகி உள்ளது.  நேற்று 1140 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 79,754 ஆகி உள்ளது.  நேற்று 77,746 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,77,044 ஆகி உள்ளது.  தற்போது 9,87,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 22,543 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,60,308 ஆகி உள்ளது  நேற்று 416 பேர் உயிர் இழந்து மொத்தம் 29,531 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,549 பேர் குணமடைந்து மொத்தம் 7,40,061  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 9,894 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,67,123 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,912 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,131 பேர் குணமடைந்து மொத்தம் 4,67,139 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,693 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆகி உள்ளது  இதில் நேற்று 74 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,381 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,968 பேர் குணமடைந்து மொத்தம் 4,47,366 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,894 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,59,445 ஆகி உள்ளது  இதில் நேற்று 104 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,265 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,402 பேர் குணமடைந்து மொத்தம் 3,52,958 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 6,205 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,12,036 ஆகி உள்ளது  இதில் நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,429 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,958 பேர் குணமடைந்து மொத்தம் 2,39,485 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.