டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,99,710 ஆக உயர்ந்து 1,38,159 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 36,456 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 94,99,710 ஆகி உள்ளது.  நேற்று 500 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,38,159 ஆகி உள்ளது.  நேற்று 43,203 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 89,31,798 ஆகி உள்ளது.  தற்போது 4,27,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,930 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,28,826 ஆகி உள்ளது  நேற்று 95 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,246 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,290 பேர் குணமடைந்து மொத்தம் 16,91,412  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 89,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,330 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,86,277 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,792 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 886 பேர் குணமடைந்து மொத்தம் 8,50,707 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 685 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,68,749 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,996 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,094 பேர் குணமடைந்து மொத்தம் 8,54,526 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,427 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,83,319 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,722 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,094 பேர் குணமடைந்து மொத்தம் 7,60,617 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,980 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,375 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,08,358 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,271 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,151 பேர் குணமடைந்து மொத்தம் 5,44,864 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.