டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் குணமடையும் விகிதம் 50%க்கு மேல் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதுவரை 3,22,465 பேர் பாதிக்கபட்டுள்ளன்ர். இதில் 9209 பேர் உயிர் இழந்துள்ளனர்  உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4 ஆம் இடத்தில் உள்ளது.  அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.  இந்நிலையில் சற்றே ஆறுதலாக குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று, ”இதுவரை இந்தியாவில் 1,63,076  பேர் குணம் அடைந்துள்ளனர்.   இப்போது குணம்டைந்தோர் எண்ணிக்கை விகிதம் 50 சதவிகிதக்கும் மேல் உளது.  இதனால் பாதிப்படைந்தோரில் பாதிக்கும்மேல் குணமடைந்துள்ளதை இது தெரிவிக்கிறது.   தொற்றுக்களை சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சையே இதற்கு காரணம் ஆகும்.

இப்போது இந்தியாவில்  1,50,142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.  தற்போது கொரோனா சோதனைக்கூடங்கள் எண்ணிக்கை 893 ஆக அதிகரிக்கப்ட்டுள்ளது. இதில் அரசு பரிசோதனைக் கூடங்கள் 646, மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்கள் 247 ஆகும்.” என தெரிவித்துள்ளது.