மகிழ்ச்சி: கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 3வது நபரும் வீடு திரும்பினார்!

திருவனந்தபுரம்:

சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே 2 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில், தற்போது 3வது நபரும் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார். இது கேரள மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் வுகான்  பகுதியில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வரகிறது.  சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் இந்தியா உள்பட உலகின் 22 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளாவைச் சேர்ந்த மொத்தம் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள்  சீனாவில் இருந்து கேரளத்துக்குத் திரும்பியவர்கள். அவர்கள்  தனிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு திருச்சூர், ஆழப்புழா மற்றும் காசர்கோட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

அவர்கள் உடல்நிலை சீரானதைத்தொடர்ந்து,  திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு கரோனா கடந்த வாரம்  வியாழக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அடுத்த காசர்கோட் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் 3வது நபரும் சிகிசிச்சை முடிந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் 3 பேரும் அடுத்த 10 நாட்களுக்கு வீட்டிலேயே தனிப்பட்டு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சை முடிந்து வெற்றிகரமாக திரும்பியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.