புதுடெல்லி: இந்திய அரசின் மொத்தக் கடன்தொகை, முதன்முறையாக ரூ.101.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பொருளாதார விவகாரத் துறையின் காலாண்டு அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் முடிவடைந்த காலகட்டத்தில், அரசின் ஒட்டுமொத்த கடன்தொகை ரூ.101.3 லட்சம் கோடிகளைத் தாண்டியுள்ளது. கடந்த மார்ச் முடிவடைந்த காலகட்டத்தில், கடன்தொகையின் அளவு ரூ.94.6 லட்சம் என்பதாக இருந்தது.

இந்தத் தொகையில், பொதுக்கணக்கு கடன்தொகை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தக் கடன் தொகையில் அந்தத் தொகை ரூ.91.1% அகும்.

கொரோனா பரவல் காரணமாக, அரசிற்கு பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதால், ஒட்டுமொத்த கடன்தொகை அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், இக்காலகட்டத்தில், அரசிற்கான வருவாயை சேகரிக்க முடியவில்லை என்பது முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.