டில்லி:

மோடி தலைமையிலான கடந்த  4ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கடன் 50% உயர்ந்துள்ள தாக  அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. 54 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை தற்போது 82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் மொத்த கடன் கடந்த 2014ம் ஆண்டு ஜூன்  வரையில் ரூ. 54,90,763 கோடியாக இருந்தது. அதுவே மோடி நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற பிறகு 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த கடன் தொகை  82,03,253 கோடி ரூபாய் என்று சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

மோடியின் திறமையற்ற ஆட்சி காரணமாக, வங்கிகளில் கடன் வாங்கிய பெரும் பண முதலைகள், நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர். இதன் காரணமாக வங்கிகள் பேரழிவை சந்தித்து வருகின்றன. மேலும் கறுப்பு பணத்தை கொண்டு வருவேன் என்ற மோடி… அதை கண்டு கொள்ளாத நிலையில், நாட்டின் கடன் மட்டும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு,  ஒட்டுமொத்த கடன் நிலை பற்றிய விரிவான பகுப்பாய்வு ஒன்றை வெளியிட்டு வருகிறது. 2010-11 முதல் அரசாங்க கடன் மீதான வருடாந்திர நிலைப்பாடு குறித்து ஆய்வறிக்கை  வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்றும்  அரசு கடன் பத்திரத்தின் 8வது பதிப்பு வெளியிடப்பட்டது. அதில், தற்போதைய கடன் விவரங்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்படி, மோடி அரசின் மொத்த கடன்கள்  49 சதவிகிதம் அதிகரித்து ரூ. 82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன.  அதன்படி,   மத்திய அரசின் மொத்த கடன் செப்டம்பர் 2018 வரையில்,  82,03,253 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் வெகு அதிகம் என்று கூறப்படுகிறது.

மோடி அரசின் கடந்த 4 ஆண்டுகளில்  அரசாங்க கடன்களில் மிகப் பெரிய எழுச்சி ஏங்றபட்டுள்ளது.  இந்த  நான்கு ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் மொத்த கடன்  48 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 73 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது  பொதுக் கடனில் 51.7 சதவீத வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. இது, உள்நாட்டில் கடனை 54 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இந்த 4 ஆண்டு காலக்கட்டங்களில்  சந்தை கடன்களில்  47.5 சதவிகிதம் உயர்ந்து 52 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகரித்துள்ளது. தங்கம் பத்திரங்கள் மூலம் எழுப்பப்பட்ட கடன் ஜூன் 2014 ஆம் ஆண்டின் முடிவில், தங்க நாணயமாக்கல் திட்டம் உட்பட ரூ. 9,089 கோடியாக இருந்தது.

மத்திய அரசாங்கத்தின் மொத்த கடன்கள்,   நடுத்தர கால சரிவு போக்கு மற்றும் அரசாங்கத்தின் கடன் பற்றாக்குறை போன்றவை நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  எனினும், அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறை நிதி நடவடிக்கைகளின் விவரங்களை உள்ளடக்கியது.

நாட்டின் கடன் அதிகரித்தாலும், நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையிலிருந்து சிறிய உதவிகள் மட்டுமே  எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் வரை முதல் எட்டு மாதங்களில் நிதி பற்றாக்குறை 7.17 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஆண்டு வருமானம் 6.24 லட்சம் கோடி ரூபாயில் 114.8 சதவீதமாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.