மொஹாலி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், முதல் போட்டி மழையால் ரத்தாக, இரண்டாவது போட்டி மொஹாலியில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

பின்னர், களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் ஷர்மா 12 ரன்களும், ஷிகர் தவான் 40 ரன்களும், ரிஷப் பண்ட் 4 ரன்களும் எடுத்தனர். ஆனால், நிலைத்து நின்று ஆடிய கேப்டன் கோலி 52 பந்துகளில் 72 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களுடன் களத்தில் நின்றார்.

இந்திய அணி 19 ஓவர்களிலேயே வேலையை முடித்துக் கிளம்பியது. மேற்கிந்திய தரப்பில் ஃபெலுக்வயோ, ஷாம்ஸி மற்றும் ஃபோர்ட்யூன் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.