இந்தியாவில் பிளாக் செயின் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாக்களிக்கும் இயந்திரம் : விரைவில்…

பிளாக் செயின் . யாரும் அணுக இயலாத ஐபி முகவரிகள் மற்றும் பாதுகாப்பான தனி இணைய இணைப்பு மற்றும் விரல் ரேகையுடன் கூடிய வெப் கேமிரா ஆகியவற்றுடன் இணைத்து புதிய வாக்களிக்கும் இயந்திரத்தினை உருவாக்க உள்ளதாக மூத்த துணைத் தேர்தல் ஆணையர்  சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்

இந்திய தேர்தல் ஆணையமும், இந்திய தொழில்நுட்ப ஆய்வுக்கழகம்-சென்னையும் இணைந்து புதிய வாக்களிக்கும் இயந்திரத்தினை உருவாக்க உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டால் வாக்காளர்கள் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம்,

வாக்காளரை சரிபார்த்தபின்னர் பிளாக்செயினை கொண்டு மின்னணு வாக்களிக்கும் தாள் ஒன்று உருவாக்கப்படு கிறது.

வாக்களித்தபின்னர் அளிக்கப்பட்ட வாக்கானது பாதுகாப்பாக மறைகுறிமுறையாக்கப்பட்டு பிளாக்செயினில் ஒரு கணுவில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட பின்னர் அதன் விபரம் வாக்கு சார்ந்த நபர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது

அளித்த வாக்கினை சரி பார்க்கும்போது ஓட்டு  அந்த கணுவில் சரியாக சேமிப்பட்டுள்ளதா? சேதமடைந்துள்ளதா ?அல்லது ஏதேனும்  மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்றும் சோதித்தபிறகே வாக்கு எண்ணிக்கையில் வரும்.

எங்கிருந்து வேண்டுமானாலும் ஓட்டளிக்கலாம் என்பது வாக்காளர் வீட்டில் இருந்துகொண்டே வாக்களிக்கலாம் என்பதல்ல , எந்த வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கலாம் என்பதே என்று மூத்த தேர்தல் துணை ஆணையாளர் சக்சேனா தெரிவித்தார்

-செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: New Voting Machine with Blockchain Technology in India: Coming Soon ...
-=-